கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திடீர் ஆய்வு செய்து பல்வேறு திட்டங்கள் குறித்து கேட்டறிந்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தான் செல்லும் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் குறைகளை தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார்.
அந்த வகையில், இன்று கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட திட்ட அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் வரும் 10 ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இணைய வழியிலான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில், அமைச்சர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க:"சமூக நலத்துறை பணியிடத்துக்கு இந்தி மொழி தகுதியாக கோரி விளம்பரம் வெளியிட்ட அதிகாரி நீக்கம்"-அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்
தொடர்ந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘உயர்வுக்கு படி’ போன்ற திட்டங்களை அதிகளவில் மாணவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலும் விரிவான ஆய்வினை மேற்கொண்டார். இதில், விலையில்லா பொருட்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலை குறித்தும், மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக, முதலமைச்சர் வருகின்ற 8ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தை நடந்த உள்ளதை முன்னிட்டு இன்று (நவ.04) சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி பள்ளிக் கல்வித்துறையின் இயக்குநர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அறிவிக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்