தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"காவல்துறை ஒன்றும் அரசியல் ஏஜென்சி அல்ல" - நீதிபதி கண்டனம்! - MADRAS HIGH COURT

காவல்துறை அரசியல் கட்சியின் ஏஜெண்டாக செயல்படாமல், மக்களுக்கான அரசு நிறுவனம் போல செயல்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 19 hours ago

சென்னை:புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அருந்ததியருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்வது, மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 2024ம் ஆண்டு பேரணி நடத்த அனுமதி கோரி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அளித்த விண்ணப்பத்திற்கு, குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் பேரணிக்கு அனுமதியில்லை எனவும், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இருந்து பேரணி நடத்தும் வகையில் வழித்தடத்தை மாற்றிட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து நேரடியாக சென்று தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்த நிலையில், பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதனால், அனுமதி மறுத்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:“சீர்திருத்தும் சிறைத்துறை அதிகாரிகள் தவறிழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதது” - நீதிபதிகள் காட்டம்!

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநரை சந்திக்க நேரம் உறுதி செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது சட்டவிரோதமானது. பேரணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொள்ள வந்த கட்சியினரை மழை என்று கூட பார்க்காமல் கைது செய்து மண்டபங்களில் அடைத்தனர் என கிருஷ்ணசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

பின்னர், அதற்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, கடைசி நேரத்தில் பேரணிக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டால் என்ன அர்த்தம்? காவல்துறை அரசியல் ஏஜென்சி அல்ல அரசு ஏஜென்சி. பேரணிக்கு அனுமதி அளிப்பதோ, மறுப்பதோ வேறு விஷயம். அதை உரிய காலத்திற்கு முன்பே தெரிவித்திருக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி வேல்முருகன், மனுவுக்கு பதில் அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details