தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்சோ வழக்கில் விடுதலையான நபருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை! - sexual harassment case - SEXUAL HARASSMENT CASE

Mayiladuthurai Sexual Harassment Case: மயிலாடுதுறை அருகே போக்சோ வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் இளைஞருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2024, 11:00 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்‌. இதுதொடர்பாக குத்தாலத்தைச் சேர்ந்த 29 வயதான ராஜேஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மேலும், குத்தாலம் காவல்நிலையத்தில் இவ்வழக்கினை விசாரணை செய்த காவல் ஆய்வாளர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்த வழக்கின் விசாரணையானது, நாகப்பட்டினம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 12 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இவ்வழக்கின் குற்றம் சாட்டப்பட்ட நபர் ராஜேஷ் குற்றவாளி அல்ல என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனைத் தொடர்ந்து, திருச்சி மண்டல காவல்துறை தலைவர் உத்தரவின்படி, இவ்வழக்கின் மேல்முறையீடானது சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேல்முறையீட்டில் இவ்வழக்கில் தொடர் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தால் நடத்தப்பட்டு, வழக்கின் இறுதிகட்ட விசாரணையானது நேற்று நடைபெற்ற நிலையில், நாகப்பட்டினம் மகிளா நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜேஷ் என்பவர் குற்றவாளி என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இவ்வழக்கை விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதிபதி, ராஜேஷுக்கு இரண்டு பிரிவுகளில் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் மற்றும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றவாளி அபராதத்தை கட்டத்தவறும் பட்சத்தில், குற்றவாளிக்கு மேலும் 6 மாதம் கால சிறைத் தண்டனையும் விதிக்க உத்தரவிட்டார். தண்டனை பிறப்பிக்கப்பட்ட ராஜேஷை குத்தாலம் காவல் ஆய்வாளர் ஜோதிராமன் திருச்சி சிறையில் கொண்டு சென்று அடைத்துள்ளார்.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து திறம்பட நீதிமன்ற அலுவல் புரிந்த மயிலாடுதுறை மாவட்ட குத்தாலம் காவல்நிலைய போலீசாரை, திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல்ஹக், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க :கால்நடைத் துறையில் பணி மூப்பு அடிப்படையில் கண்காணிப்பாளர் நியமிக்க அனுமதி! - high court madurai bench

ABOUT THE AUTHOR

...view details