தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"உரிமைகளை பேசும் மக்கள், கடமைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை" - நீதிபதி ஆதங்கம்! - MADRAS HIGH COURT

பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்லாமல், அவற்றுக்கு நமது செயலே காரணம் என்பதை உணர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2024, 7:33 AM IST

சென்னை:பேரிடர்களுக்கு இனி இயற்கையைக் குறை சொல்லாமல், அவற்றுக்கு நமது செயலே காரணம் என்பதை உணர வேண்டும் எனவும், உரிமைகளைப் பற்றி பேசும் மக்கள் தங்கள் கடமைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளனர்.

ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைவாச தளங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பது தொடர்பான வழக்குகள் நேற்று (டிச.3) நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், உலக நாடுகளில் பிளாஸ்டிக்களை குப்பைத் தொட்டியில் போடுகின்றனர். ஆனால், நாம் தான் அவற்றை கண்ட இடங்களில் தூக்கி வீசுகிறோம் என தெரிவித்தனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் வனவிலங்குகளின் உணவுச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் ஓரங்களில் இருந்து டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்களைச் சேகரிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், இனிவரும் காலங்களில் ஏற்படும் பேரிடர்களுக்கு இயற்கையை குறை கூற முடியாது என்றும், அவற்றுக்கு நாமே காரணம் என்றும் வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பிளாஸ்டிக் தார் சாலை: மலேசியாவைத் தொடர்ந்து காங்கோ நாட்டோடும் ஒப்பந்தம் போட்ட கல்லூரி!

அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், உரிமைகளைப் பற்றி பேசும் மக்கள் தங்கள் கடமைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று ஆதங்கம் தெரிவித்து, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details