தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா?-உதயநிதி டிஷர்ட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு கேள்வி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஆடைக் கட்டுப்பாடு வழக்கில், அமைச்சர் பதவி வகிப்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court  Minister Dress code  உதயநிதி ஸ்டாலின் உடை விவகாரம்  Udhayanidhi Stalin
சென்னை உயர்நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலின் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2024, 12:50 PM IST

Updated : Oct 29, 2024, 1:19 PM IST

சென்னை:துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராna வழக்கில், அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாட்டு அரசாணை அமைச்சர்களுக்கு பொருந்துமா? டி-சர்ட் கேஷுவல் உடையா? அமைச்சர் பதவிகளை வகிப்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என விளக்கமளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்ய குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "அனைத்து அரசு ஊழியர்களும் முறையான ஆடை அணிந்து வர வலியுறுத்தும் வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஃபார்மல் பேண்ட், ஷர்ட் அல்லது தமிழர் பாரம்பரிய ஆடையான வேட்டி, சட்டை அணிந்து வர வேண்டும் என அரசாணையில் கூறியுள்ள போதிலும், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து வருகிறார்.

அரசு ஊழியர்கள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அரசியல் கட்சிகளின் சின்னத்தை வெளிப்படுத்தத் தடை உள்ளதாகக் கூறியுள்ள மனுதாரர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயல் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்பதால் அரசு நிகழ்ச்சிகளில் முறையான ஆடைகளை அணிந்து வரும்படி அவருக்கு உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க:"ஆட்சியில் பங்கு" விஜயின் அரசியல் அணுகுண்டு : வேலை செய்யுமா?

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, துணை முதலமைச்சர் டி-சர்ட் அணிவது அரசாணைக்கு எதிரானது என மனுதாரர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழக அரசின் அரசாணை அரசு ஊழியர்களுக்கு தான் பொருந்தும். அமைச்சர்களுக்கு பொருந்தாது என விளக்கமளித்தார்.

அதையடுத்து, அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு பொருந்துமா? டி-சர்ட் கேஷுவல் உடையா? அரசியல் சட்டப் பதவிகளை வகிப்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என பதில் மனுத் தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Oct 29, 2024, 1:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details