தமிழ்நாடு

tamil nadu

உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு கோரிய வழக்கு.. உரிய பதிலளிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் காலக்கெடு! - Tamil notification on flights

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 3:32 PM IST

Tamil notification on flights; உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகளை வழங்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து 12 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய விமான போக்குவரத்து துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு வழங்க மத்திய விமானப் போக்குவரத்து துறைக்கு உத்தரவிடக் கோரி, உலகத் தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இலங்கை, மலேசியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்கப்படும் நிலையில், இந்தியாவில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்குவதில்லை' என்று மனுதாரர் அறக்கட்டளை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கனகராஜ் வாதிட்டார்.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வழங்க கோரி மனுதாரர் அறக்கட்டளை அளித்த விண்ணப்பத்தை 12 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:பாமக கொடிக் கம்பத்தை அறுத்துச் சென்ற மர்ம நபர்கள்.. குன்றத்தூரில் நடந்தது என்ன? - PMK Party Flagpole Issue

ABOUT THE AUTHOR

...view details