தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் - அரசுக்கு நீதிமன்றம் கெடு!

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப்பெறும் திட்டம், 2025 ஏப்ரல் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 19 hours ago

சென்னை:மலை சுற்றுலாத் தலங்களில் மதுபாட்டில்களை வீசிச் செல்வதால், விலங்கினங்கள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தற்போது இந்த வழக்கு நேற்று (டிச.3) நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த திட்டம் 2025 ஏப்ரல் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதாவது, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக விற்கவும், திருப்பித் தரப்படும் காலி பாட்டிலுக்கு 10 ரூபாயை திருப்பிக் கொடுக்கவும் வகை செய்யும் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மலைப்பகுதிகளில் அமல்படுத்த உத்தரவிட்டது. பின்னர், இந்த திட்டம் பல்வேறு மாவட்டங்களுக்கு தற்போது விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் 16 மாவட்டங்களில் காலி மது பாட்டில்களைத் திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.45 கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும், அதில் ரூ.15 கோடியை வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க:மெத்தபெட்டமைனை போதை தடுப்பு காவலர்களே சப்ளை செய்த கொடூரம்! சிக்கியது எப்படி?

மேலும் காலி பாட்டில்களைத் திரும்ப பெரும் திட்டம் ஏப்ரல் மாதம் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என அரசு தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் காரணமாக டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமை குறித்து டாஸ்மாக் நிர்வாகம் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையைப் பிப்ரவரி 4ஆம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details