சென்னை:புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2024 நவம்பர் 7ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணியாக சென்று தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது, முந்தைய நாளான 2024 நவம்பர் 6ஆம் தேதி அனுமதி மறுத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்ததால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளித்த காவல்துறை, போராட்டத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பித்த போது, அது தொடர்பாக பல்வேறு விவரங்களை அளிக்குமாறு கேட்டதற்கு எந்த பதிலும் அளிக்காததால், பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பேரணி நடைபெறாததால் ஏற்பட்ட பாதிப்புக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்பது முறையல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது.