சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் எருமையூர் கிராமப் பகுதிகளில் 52-க்கும் மேற்பட்ட கல் உடைக்கும் ஆலைகள் செயல்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் மிகுந்த ஒலி மாசு, காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக இ.வி.சம்பத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், "எருமையூர் பகுதியில் மட்டும் சுமார் 3.5 கிலோ மீட்டர் தொலைவிற்குள்ளாகவே 52 கல் உடைக்கும் ஆலைகள் செயல்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுவாசிக்க முடியாத அளவிற்கு காற்று மாசடைந்துள்ளது. மேலும், 52 கல் உடைக்கும் ஆலைகளில் சில ஆலைகள் அரசின் அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதாகவும், அந்த ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:டாஸ்மாக் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு!