தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளை தீர்ப்பு! - Ministers disproportionate case - MINISTERS DISPROPORTIONATE CASE

Ministers disproportionate assets case: சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மறுஆய்வு வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளை தீர்ப்பு வழங்க உள்ளார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 9:33 PM IST

சென்னை:வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில், மேல் விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தன.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுத்த உத்தரவுக்கு எதிராக, இரு வழக்குகளையும் மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை துவங்கியது.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கடந்த ஜூன் மாதம் இறுதி வாதங்கள் நிறைவுபெற்றன. இதனையடுத்து, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்நிலையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு மறுஆய்வு வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளை (ஆகஸ்ட் 07) வழங்கவுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:விமான நிலையத்தில் தவிக்கும் கேன்சர் நோயாளி.. வங்கதேச தம்பதிக்கு நேர்ந்த சோதனை! - 2 people suffering chennai airport

ABOUT THE AUTHOR

...view details