தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விபத்துகளால் ஏற்படும் இழப்புகள்; மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசுக்கு அறிவுறுத்தல் - Madras High Court - MADRAS HIGH COURT

Madras High Court: சாலை விபத்துகளால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்ப்பதற்கு பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 8:41 PM IST

சென்னை: தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர், மருத்துவர் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பிலிருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் கே.ஸ்ரீனிவாசன் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்டிக்கரைப் பயன்படுத்த இடைக்கால அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் வழக்கு குறித்து பதில் மனுவைத் தாக்கல் செய்தார். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூலை.2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதனிடையே, கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்கள் சாலைகளில் இன்னும் வலம் வந்து கொண்டிருப்பதாக நீதிபதி சுட்டிக்காட்டினார். கார்களில் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டு இருப்பதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பிய நீதிபதி, சுங்கச்சாவடிகளில் ஆம்புலனஸ் வாகனங்களுக்கென தனி வழி இருந்தும் அதை முறைப்படுத்தாமல் இருப்பதாக வேதனை தெரிவித்தார்.

மேலும், நகரச் சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கென தனி வழி ஏற்படுத்த வேண்டுமெனவும் நீதிபதி அறிவுறுத்தினார். சாலை விபத்துகளைத் தடுக்க பள்ளி, கல்லூரி அளவில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர் பிரதாப், கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும், கார்களில் கட்சிக் கொடி வைத்திருப்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இதையும் படிங்க:தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள்.. தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! - SOUTHERN RAILWAY

ABOUT THE AUTHOR

...view details