தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி! - Ooty Mettupalayam Hill train - OOTY METTUPALAYAM HILL TRAIN

Mettupalayam - Ooty Train: கனமழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட மேட்டுப்பாளையம் உதகை இடையேயான மலை ரயில் சேவை ஆறு நாட்களுக்குப் பிறகு மீண்டும் துவங்கியது.

OOTY METTUPALAYAM HILL TRAIN
OOTY METTUPALAYAM HILL TRAIN (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 5:14 PM IST

நீலகிரி: தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் உதகை இடையேயான மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டும், ராட்சத மரங்கள் விழுந்தும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை ஆறாம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது.

OOTY METTUPALAYAM HILL TRAIN (Credits - ETV Bharat Tamil Nadu)

இதற்கிடையில், ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள் மற்றும் மரங்கள் அகற்றப்பட்டு இன்று மீண்டும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி செல்லும் மலை ரயில் சேவை துவங்கியது. ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் ரயில் சேவை துவங்கியதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயிலில் பயணித்தனர்.

இதையும் படிங்க:'இந்த ஏரியாவில் எல்லாம் மழை வெளுத்து வாங்க போகுது' - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - TN Weather Update

ABOUT THE AUTHOR

...view details