தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்த ஒரு வாரத்திற்கு தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - TN Rain update - TN RAIN UPDATE

TN Weather Update: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுப்பெற்று மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் (credits -ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 23, 2024, 3:05 PM IST

சென்னை:தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

மாவட்டம் மழை அளவு (சென்டிமீட்டரில்)
வேப்பூர் (கடலூர்) 20 சென்டிமீட்டர்
காட்டுமயிலூர் (கடலூர்) 18 சென்டிமீட்டர்
விழுப்புரம் 17 சென்டிமீட்டர்
மைலாடி (கன்னியாகுமரி) 14 சென்டிமீட்டர்
லக்கூர் (கடலூர்) , தொழுதூர் (கடலூர்) 13 சென்டிமீட்டர்
குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), தம்மம்பட்டி (சேலம்) 12 சென்டிமீட்டர்
வால்பாறை PAP (கோயம்புத்தூர்) , கோடநாடு (நீலகிரி) 11 சென்டிமீட்டர்
அவினாசி (திருப்பூர்) , கெத்தை (நீலகிரி) , கோபிசெட்டிபாளையம் (ஈரோடு) 10 சென்டிமீட்டர்
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), குந்தா பாலம் (நீலகிரி), வேடசந்தூர் (திண்டுக்கல்), புகையிலை நிலையம் (VDR) (திண்டுக்கல்) 9 சென்டிமீட்டர்

செருமுள்ளி (நீலகிரி) , தக்கலை (கன்னியாகுமரி) , குருந்தன்கோடு (கன்னியாகுமரி) , சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) , கொட்டாரம் (கன்னியாகுமரி) , கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி) , வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி) , மீ மாத்தூர் (கடலூர்) , மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி) , சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) , லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்) , புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி) , அணைகெடங்கு (கன்னியாகுமரி) , குன்னூர் (நீலகிரி)
8 சென்டிமீட்டர்

அதிகபட்ச வெப்பநிலை:அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை விட குறைவாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 37.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32 டிகிரி – 36 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 30 டிகிரி முதல் 33 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 19 டிகிரி முதல்26 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 36.2 டிகிரி செல்சியஸ் (-2.9 டிகிரி செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.4 டிகிரி செல்சியஸ் (-2.8 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08:30 மணி அளவில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

அதன் பிறகு, இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுப்பெற்று, நாளை மறுநாள் காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது, வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்று, வங்க தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையை நோக்கி நகரக்கூடும். கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இன்று, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தமிழகத்தில், நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.மே 25 முதல் 29 ஆம் தேதி வரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

இன்று முதல் மே 27 வரை, அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.அடுத்த 24 மணி நேரத்திற்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் 2-3 டிகிரிசெல்சியஸ் இயல்பை விட குறையக்கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.மே 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும், இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரிசெல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரிசெல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இதையும் படிங்க:10 தனிப்படை அமைத்தும் முடியல.. ஜெயக்குமார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு! - Jayakumar Case Cbcid

ABOUT THE AUTHOR

...view details