தருமபுரி:தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை மற்றும் மீட்பு மையம் 2022ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றது. தருமபுரி மாவட்டத்தில் ஆதரவற்று, சாலைகளில் சுற்றித் திரியும் மன நோயாளிகள் மற்றும் வீடற்ற நோயாளிகளுகளை சமூகப் பணியாளர்கள் மூலமாக மீட்டு இந்த மையத்தில் சேர்த்து சிகிச்சை மற்றும் பராமரிப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் தற்போது வரை வேற்று மாநிலங்களைச் சேர்ந்த மனநோயாளிகள் உட்பட ஆண்கள் 77 பேர், பெண்கள் 30 பேர் என மொத்தம் 107 நபர்களை மீட்டு உள்ளனர். அதன்பிறகு மனநல சிகிச்சைக்குப் பின் சுமார் 60 நோயாளிகளை அவர்களுக்கு வழங்கப்பட்ட மனநல ஆலோசனையின் மூலமாக கிடைத்த தகவலை வைத்து, அவர்களின் முகவரியை கண்டறிந்து குடும்பத்தாருடன் சேர்த்து வைத்துள்ளனர். தற்போது இந்த மையத்தில் 23 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தருமபுரி நகரக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மனநல சமூகப் பணியாளர்கள் சுதாகர் மற்றும் மாதேஸ்வரன் மூலம் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் சேர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.