தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"உயிரோடு இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜகவை வர விடமாட்டேன்" - மதிமுக வைகோ பேச்சு! - MDMK VAIKO CRITICIZE BJP

நான் உயிரோடு இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜகவை வர விடமாட்டேன் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொது செயலாளர் வைகோ
மதிமுக பொது செயலாளர் வைகோ (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2025, 1:28 PM IST

சென்னை: பாஜக இந்துத்துவா சக்திகளால் தமிழ்நாட்டில் ஒருபொழுதும் காலூன்ற முடியாது. அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் ரசிக்கும்படியாக இருந்தது என மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

புத்தாண்டையொட்டி நேற்று (ஜனவரி 01) புதன்கிழமை எழும்பூரில் உள்ள தாயகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், "புதிய ஆண்டில் புத்துணர்ச்சியுடன் மதிமுக பணிகளை செய்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களுக்காக புதிய திட்டங்களை கொண்டுவந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்ற மாநில முதலமைச்சர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

ஆனால், மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான உதவியை இதுவரை செய்யவில்லை. கேட்ட நிதிகளில் 5 சதவீதம் நிதியை மட்டும் தந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மோசமான திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்த நினைக்கிறார். அதிபர் வேட்பாளராக மாற வேண்டும் என்ற எண்ணம் மோடிக்கு உள்ளது. இது நடைமுறையில் சாத்தியமற்றது. இந்தியாவுக்கு பேராபத்து என்றால் அது மோடி அரசால் தான் ஏற்படும்.

இதையும் படிங்க:கல்லூரி, பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது - உயர் கல்வித்துறை அதிரடி!

நாடாளுமன்ற தேர்தலில் சுற்றி சுற்றி வந்த மோடிக்கு 250 இடங்கள் கிடைத்தது. ஆனால், எதிர்காலத்தில் இந்த 250 கிடைக்காது. தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் அதிமான இடங்களில் வெற்றி பெறும். எங்கள் கூட்டணியில் நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம், எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. கூட்டணியை மேலும் வலுப்படுத்தி வெற்றி பெறச் செய்வோம். வலது தோளாகவும், இடது தோளாகவும் இருந்து திமுகவுக்கு நாங்கள் பாடுபடுவோம்.

விஜய்யின் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. யார் வேண்டும் என்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம். கூடங்குளத்தில் மேலும், இரண்டு அணு உலைகளைக் கொண்டு வருவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழ்நாட்டை குறிவைத்து பாஜக தாக்குகிறது. நான் உயிரோடு இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜகவை வர விடமாட்டேன். தமிழ்நாட்டை காலனி அடிமை நாடாக டெல்லி கருதுகிறது.

பாஜக இந்துத்துவா சக்திகளால் தமிழ்நாட்டில் ஒருபொழுதும் காலூன்ற முடியாது. அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் ரசிக்கும்படியாக இருந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் கொடூரமானது. அந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details