மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரியில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து 'தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்' நடத்தினர்.
இந்த முகாமினை எம்.பி. சுதா, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார் , நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இதில் திருச்சி, சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்றன.
எம்.பி சுதா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) மேலும் இந்த முகாமில் 1400க்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மயிலாடுதுறை எம்.பி உறுப்பினர் சுதா பேசுகையில், "கல்விக்கண் திறந்த காமராஜர் கொடுத்த கல்வியால் தான் நான் இன்று உயர்ந்துள்ளேன். அரசுப் பள்ளியில் படித்து, அரசு வழங்கிய மதிய உணவை சாப்பிட்டு இன்று நாடாளுமன்ற உறுப்பினராக முன்னேறியுள்ளேன்.
இதையும் படிங்க:நள்ளிரவில் மனம் நொந்த காங்கிரஸ் பெண் எம்பி.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சென்னை ஏர்போர்ட் நிர்வாகம்!
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு முன்பு தேர்தல் அறிக்கையில் பாஜக இளைஞர்களுக்கு வருடத்திற்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கி தரும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்து இருந்தார். அதன்படி பார்த்தால் பாஜக கடந்த 10 வருடங்களில் 20 கோடி வேலைவாய்ப்பை புதிதாக ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் மாறாக 12 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பு இழந்து உள்ளனர். இதுவே மத்திய அரசின் சாதனை" என கூறியுள்ளார்.