விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு, மூன்றாவது நாளாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தீவுத்திடலில் இன்று (ஜனவரி 05) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற பொது குழு கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன், அடுத்த மாதம் வந்தால் 72 வயதாகிவிடும். ஆகையால், என்னை மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும். எனக்கு கட்சிப் பதவி வேண்டாம் என அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், புதிய மாநில செயலாளராக திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்த, மத்திய குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவருமான பெ.சண்முகம், புதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் சண்முகம் (ETV Bharat Tamil Nadu) பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து புதிதாக மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சண்முகம் கூறுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் அரசியல் சூழ்நிலை சம்பந்தமாகவும், தொழிலாளிகள், விவசாயிகள் உழைக்கும் மக்களுடைய பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக, முக்கிய பிரமுகர்களுடன் விவாதித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுள்ளது.
போராட்டங்கள்:
இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் செயல் வடிவம் படும்படியாக அதற்கான பணிகள் நடைபெறும். மதவெறி பாஜக அரசு மாநில அரசின் அதிகாரங்களை பறிப்பது, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் பார்ப்பது, மாநில அரசியல் சாசனங்கள் வழங்கி அடிப்படை உரிமைகளுக்கு மாறாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இத்தகைய கொள்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுப்பெறும் போராட்டங்களை முன்னெடுக்கும்.
இதையும் படிங்க:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரானார் பெ.சண்முகம்.. முதல்வர், விஜய் வாழ்த்து!
தாராளமயம், பொருளாதார கொள்கை விளைவாக வேலை வாய்ப்பின்மையும், விலைவாசி உயர்வு அனைத்து மக்களையும் பாதிக்கும் வகையில் உருவெடுத்துள்ளது. வேலை தருவோம் என்று கூறிய பாஜக ஆட்சியில், வேலையில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்பி, வேலை வாய்ப்பை பறித்து எதிரான கொள்கையை கடைப்பிடிக்கிறார்கள். நிரந்தர வேலை வாய்ப்பு என்பதற்கு பதிலாக ஒப்பந்த தொழிலாளர்கள். நிரந்தர பணி என்பது இனி அரசு பணியில் இருக்காது. மிக மோசமான பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடிக்கிறார்கள்.
திமுகவுடன் தொடர்ந்து பயணிப்போம்:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத வெறி சக்திகளை எதிர்ப்பதில் திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பயணிக்கும். போராட்டம், ஆர்ப்பாட்டம் அரசியல் சாசனத்தில் உள்ளவை, எந்த அரசும் அதை நிறுத்த முடியாது. திமுக வெளிச்சத்தில் தான் நாங்கள் இருக்கிறோம் என்று முரசொலியில் சொல்வது பொருத்தமானதல்ல” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.