சென்னை:சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நீச்சல் குளம் சுமார் 1 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது அமைச்சர்கள் கே.என் நேரு, சேகர்பாபு, மா.சுப்ரமணியன், தயாநிதி மாறன் எம்பி, மாநகராட்சியின் மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ், சென்னை மாநகராட்சியின் ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தில் குளிக்க ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான QR Code ஐ யும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்தார். சென்னை மெரினா கடற்கரையில் 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது மெரினா நீச்சல் குளம் உருவாக்கப்பட்டது.
மெரினா நீச்சல் குளம்:1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை மாநகராட்சி இடம் இந்த நீச்சல் குளம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 77 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மெரினா நீச்சல் குளம் செயல்பட்டு வருகிறது.
தனியார் பராமரிப்பில் விடப்பட்ட இந்த நீச்சல் குளம் தற்பொழுது ஒரு கோடியை 37 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு சென்னை மாநகராட்சியால் நேரடியாக பராமரித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தில் நடைபாதையை சீரமைத்து வர்ணம் பூசுதல், நடைபாதையில் புதிய கற்கள் மற்றும் ஓடுகள் பதித்தல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளும். பார்வையாளர்கள் அமரும் இடத்தில் மேற்கூரை அமைத்தல், குளத்தைச் சுற்றியுள்ள சுவரில் வண்ண ஓவியம் வரைந்து அழகுபடுத்துதல், ஒப்பனை அறை, குளியலறை, உடைமாற்றும் அறைகளை பழுது பார்த்து மேம்படுத்துதல் போதிய மின்விளக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ரூ.5000க்கு மேல் கரண்ட் பில் வருதா? - இனிமேல் இப்படி தான் பில் கட்டனும்!