தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் பயங்கரம்..முன்விரோத காரணமாக பெண் வெட்டி படுகொலை! - CHENNAI MURDER

சென்னையில் திருவொற்றியூரில் முன்விரோத தகராறில் பெண் ஒருவர் வெட்டி படு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள நபர்
கைது செய்யப்பட்டுள்ள நபர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2024, 11:01 PM IST

சென்னை:திருவொற்றியூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் மாரி(55), இவருடைய மனைவி கௌரி(50). இவர்கள் இருவரும் அதே பகுதியில் சாலையில் காய்கறிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று மாலை இவரது கடைக்கு வந்த நபர் ஒருவர்,தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணவன், மனைவி இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த கௌரி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் மாரிக்கு தலை மற்றும் கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் கொலை செய்த நபரை பிடித்து வைத்து கொண்டு, திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கௌரியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:கல்லூரி மாணவிக்கு ஆபாச மிரட்டல்... மகனுக்கு தந்தையே உடந்தை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

மேலும் வெட்டு காயமடைந்த மாரியை சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கௌரியையும், மாரியையும் வெட்டிய நபர் அதே பகுதியை சேர்ந்த சேகர் (52) என்பது தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட கெளரி (ETV Bharat Tamil Nadu)

இவர் அப்பகுதியில் ரிக்‌ஷா ஓட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் கௌரிக்கு, சேகருக்கும் ஏற்கனவே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கௌரி சேகரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சேகர் கௌரியை சரமாரியாக வெட்டியுள்ளார். மேலும் இதனை தடுக்க வந்த அவரது கணவரையும் தலை மற்றும் கையில் வெட்டியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சேகரை கைது செய்த போலீசார், கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சன்னதி தெருவில் நடந்த இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details