தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை சித்திரைத் திருவிழா: கள்ளழகர் எழுந்தருளும் வைகையாற்றுப் பகுதியைச் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்! - MADURAI CHITHIRAI THIRUVIZHA - MADURAI CHITHIRAI THIRUVIZHA

Kallazagar festival: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, வைகை ஆற்றுப் பகுதியை மதுரை மாநகராட்சி தற்போது செப்பனிட்டு தூய்மை செய்து வருகிறது.

Kallazagar festival
Kallazagar festival

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 8:16 PM IST

மதுரை:உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும், சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு சித்திரை விழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 12ம் தேதி தொடங்கியது.

vaigai river

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அந்தப் பகுதியை மதுரை மாநகராட்சி தற்போது செப்பனிட்டு, தூய்மை செய்து வருகிறது.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் கள்ளழகர் திருவிழாவினை முன்னிட்டு மதுரை மாநகரே தற்போது விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், நாள்தோறும் அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், 20-ஆம் தேதி திக் விஜயமும், 21-ஆம் தேதி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 22-ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதற்கிடையே வருகின்ற 21-ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கிப் புறப்படுகிறார்.

ஏப்ரல் 22-ஆம் தேதி மூன்று மாவடி அருகே பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர் சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழாவின் மைய நிகழ்வாகக் கருதப்படும் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி ஏப்ரல் 23-ஆம் தேதி காலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் நடைபெறும். இதில் மதுரையின் பல்வேறு கிராமப்புறங்களிலிருந்து மட்டுமன்றி தென்மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் ஆழ்வார்புரம், ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் அருகே வைகையாற்றில் எழுந்தருள்வார் என்பதால், அவ்விடத்தை மதுரை மாநகராட்சி கடந்த 2 நாட்களாகச் சுத்தம் செய்து வருகிறது. கள்ளழகர் இறங்கக்கூடிய தண்ணீர்த் தொட்டியும் தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.

செம்மண், சரளைக்கற்கள் கொட்டப்பட்டு ஜேசிபி மூலமாக அவ்விடம் சமதளமாக்கப்பட்டு வருகிறது. தற்போது வைகையாற்றில் தண்ணீர் குறைவாக உள்ள காரணத்தால், இதற்காக வருகின்ற ஏப்ரல் 20-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "பாஜகவுடன் எனக்கு ஒத்துப்போகவில்லை" - வீரப்பன் மகள் மனம் திறந்த பேட்டி! - Veerappan Daughter In Politics

ABOUT THE AUTHOR

...view details