தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலையத்தின் மறு சீரமைப்பு பணிகள் தீவிரம்' - மதுரை கோட்டம் - RAILWAY STATION RENOVATION WORK

மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

மதுரை கோட்டம்
மதுரை கோட்டம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2025, 7:00 AM IST

மதுரை:மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் ரூ.526 கோடியில் நடைபெற்று வருகிவதாக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

மதுரை ரயில் நிலையம்:

"மதுரை ரயில் நிலையத்தில் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் இதுவரை கிழக்கு நுழைவாயில் பகுதியில் பல அடுக்கு இருசக்கர வாகன மற்றும் நான்கு சக்கர வாகன காப்பகங்கள் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டன. ரயில் பாதைக்கு மேல்புறம் பயணிகள் வசதிகளுக்கான அரங்கு அமைக்கும் பணிக்கான அடித்தளமிடும் பணி நடைபெற்று வருகிறது.

மதுரை ரயில் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடம் (ETV Bharat Tamil Nadu)

அதேபோல கிழக்கு நுழைவாயில் பகுதியில் முகப்பு கட்டடம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. பயணிகளுக்கு தொந்தரவு இல்லாமல் பார்சல்களை கையாள தனி நடை மேம்பாலம் அமைக்கும் பணியும், ரயில் நிலையத்தையும் பெரியார் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் சுரங்கப்பாதை பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மதுரை ரயில் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடம் (ETV Bharat Tamil Nadu)

ராமேஸ்வரம் ரயில் நிலையம்:

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 113 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பார்சல் ஆபீஸ் கட்டுமான பணி நிறைவு பெற்று விட்டது. அதேபோல ரயில் நிலைய நுழைவு வளைவு அருகே இருந்த வணிக வளாக கட்டடம் பயணிகள் தங்கும் அறைகளாக மாற்றும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இதையும் படிங்க:சுவா-ரயில்: மூணு நாலு வேண்டாம்; ரயில் சேவைகள் அனைத்தும் ஒரே ஒரு செயலியில்..!

வடக்கு பகுதியில் ரயில் நிலைய கட்டடம், ரயில் நிலையத்தை விட்டு வெளியே செல்லும் பயணிகள் சென்றுவர தனி பாதை அமைக்கும் பணியும் நிறைவு பெற்றுவிட்டது. அதேபோல, கிழக்குப் பகுதியில் ரயில் நிலைய கட்டடம், ரயில் நிலையத்திற்க்குள் வரும் பயணிகளுக்கு தனி பாதை அமைப்பு, நடைமேடை மேம்பாட்டு பணிகள் மற்றும் உப்பு நீரை குடிநீராக்கும் அமைப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள்:

அம்பாசமுத்திரம், திண்டுக்கல், காரைக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, பழனி, பரமக்குடி, புதுக்கோட்டை, ராஜபாளையம், ராமநாதபுரம், சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தி அமிர்த பாரத் ரயில் நிலையங்களாக மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

மத்திய பட்ஜெட்:

இந்த பணிகளுக்காகவும், தமிழக வளர்ச்சி திட்டங்களுக்காகவும் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிதி ஒதுக்கீட்டைக் காட்டிலும் 7.5 மடங்கு அதிகமாகும். தமிழ்நாட்டில் 2014ஆம் ஆண்டில் இருந்து 1,303 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த இலங்கை நாட்டில் உள்ள ரயில் பாதை அளவிற்கு நிகரானது. தமிழ்நாட்டில் மொத்த ரயில் பாதைகளில் 94 சதவீதம் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன" எனக் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details