சென்னை: 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில்இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் விருதுகளையும், பதக்கங்களையும் வழங்கி கவுரவித்தார்.
அந்த வகையில் மதுரை கிழக்கு, யா.கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த ஆயி அம்மாள் என்ற பூரணம் அம்மாள், தனது ரூ.7 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தினை அரசு பள்ளி கட்டுவதற்காக நன்கொடையாக வழங்கினார். இந்நிலையில் அவருக்குமுதலமைச்சரின் சிறப்பு விருதினை வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
மறைந்த தனது மகளின் (ஜனனி) நினைவாக கல்விக்காக நிலத்தை வழங்கிய ஆயி அம்மாளை அனைவரும் பாராட்டி வந்தனர். விருதைப் பெற்ற ஆயி என்ற பூரணம் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில், “கல்விக்காக நான் தானமாக கொடுத்த செயல் இவ்வளவு பிரபலமாகும் என நினைக்கவில்லை. மற்ற உதவிகளை காட்டிலும் கல்விக்காக செய்த உதவியை அனைவரும் பாராட்டுவது நிறைவாக இருக்கிறது.
இதையும் படிங்க:கேப்டன் விஜயகாந்த் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு பத்ம விருதுகள்.. முழு பட்டியல்!