தமிழ்நாடு

tamil nadu

மதுரை - ஜபல்பூர் சிறப்பு ரயில் ரத்து! - தெற்கு ரயில்வே அறிவிப்பு! - Southern Railway

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2024, 11:00 PM IST

Southern Railway: மதுரையிலிருந்து செப்டம்பர் 29, அக்டோபர் 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஜபல்பூர் சிறப்பு ரயில் (02121) மற்றும் ஜபல்பூரில் இருந்து செப்டம்பர் 26, அக்டோபர் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை சிறப்பு ரயில் (02122) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்கள் கோப்புப்படம்
ரயில்கள் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை :ராஜபாளையம் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதால் செங்கோட்டை - மதுரை ரயில் (06664) செப்டம்பர் 8, 9 ஆகிய நாட்களில் செங்கோட்டையில் இருந்து 50 நிமிடங்கள் கால தாமதமாக மதியம் 01.00 மணிக்கு புறப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது சுரங்கப்பாதை பணிகளில் முக்கிய பணிகள் நிறைவு பெற்றதால் செப்டம்பர் 8, 9 ஆகிய நாட்களில் செங்கோட்டை - மதுரை ரயில் (06664) செங்கோட்டையில் இருந்து வழக்கமாக புறப்படும் நேரமான மதியம் 12.10 மணிக்கு புறப்படும்.

மதுரை - ஜபல்பூர் ரயில் ரத்து :தெலங்கானா மாநிலம், வாரங்கல் பகுதியில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால், மதுரையிலிருந்து செப்டம்பர் 29, அக்டோபர் 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஜபல்பூர் சிறப்பு ரயில் (02121) மற்றும் ஜபல்பூரில் இருந்து செப்டம்பர் 26, அக்டோபர் 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை சிறப்பு ரயில் (02122) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

கொச்சுவேலி ரயில் நிலைய பெயர் மாற்றம் :திருவனந்தபுரம் அருகே உள்ள கொச்சுவேலி ரயில் நிலையம் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல திருவனந்தபுரம் அருகே உள்ள நேமம் ரயில் நிலையம், திருவனந்தபுரம் தெற்கு ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஆந்திரா, தெலங்கானா மழை, வெள்ளம் எதிரொலி; 10 ரயில்களின் ரூட் மாற்றம்.. முழுவிவரம் இதோ! - Southern Railway

ABOUT THE AUTHOR

...view details