மதுரை: மதுரையைச் சேர்ந்த வெரோணிக்கா மேரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது புதிய கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.
இருப்பினும் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல, கழிவுநீர் வடிகால் வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால், மருத்துவமனையில் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. போதுமான கழிப்பறை வசதிகளும் இல்லை. வார்டுகளும் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை.
ஆகவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முறையான கழிவு நீர் கால்வாய்களை அமைக்கவும், போதுமான கழிப்பறைகளை கட்டுவதோடு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை போல வார்டுகளை தினமும் சுத்தம் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இதையும் படிங்க:ஒரு வருட குற்றப்பத்திரிக்கை ரிப்போர்ட்டில் முரண்; நீதித்துறை, காவல்துறைக்கு அறிக்கை அனுப்ப உத்தரவு!