மதுரை: தமிழ்நாட்டில் பள்ளி நேரத்தைக் கணக்கில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற பொது வெளியில் பதிவான கோரிக்கையை, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து கடந்த 2013ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் இன்று (ஏப்.23) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “பள்ளி தொடங்கும் நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கினாலும், இளைஞர்களின் படிக்கட்டு பயணமும், விபத்தும் குறையவில்லை.
ஓட்டுநர்களும், நடத்துநர்களும் எப்படி சமாளிப்பார்கள்? பல இடங்களில், ஓட்டுநர்களும், நடத்துநர்களும் இளைஞர்களால் தாக்கும் காட்சிகள் அரங்கேறி வருகிறது. இளைஞர்கள் ஜாலியாக படிக்கட்டில் பயணம் செய்வது விபத்து ஏற்பட்டு இளைஞர்கள் உயிரிழக்கின்றனர்.