சென்னை: கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சில கருத்துக்களை கூறியிருந்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.