தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மது விற்பனை சட்ட விரோதமானது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து - tamil nadu liquor sales

Madras High Court: தமிழகத்தில் மது அருந்துவது சட்ட விரோதம் இல்லை, மதுவை விற்பனை செய்வதே சட்ட விரோதம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 1:33 PM IST

மது பாட்டில்கள், சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப் படம்)
மது பாட்டில்கள், சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப் படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 67 பேர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக அரசு தரப்பில் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து குமரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், தமிழகத்தில் 4,500 நூலகங்கள் உள்ள நிலையில், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. கல்வியை விட மதுக் கடைகளுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதனால், சமுதாயம் சீரழிந்து வருகிறது என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர், செந்தில்குமார் அமர்வு, "மது விற்பனை அரசின் கொள்கை முடிவு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மது அருந்துவது சட்டவிரோதம் இல்லை. மதுவை விற்பனை செய்வது தான் சட்ட விரோதமாகும். அரசின் மது குடித்து யாராவது உயிரிழந்ததாக சம்பவங்கள் இதுவரை நடந்துள்ளதா? 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் முன்னேற்றத்திற்காக கொடுக்கப்படுகிறது.

இதுவரை 6 கோடியே 50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இழப்பீடுகள் எவ்வளவு வழங்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது" எனத் தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இதையும் படிங்க: 'ஆம்ஸ்ட்ராங் கொலையை விட மோசமா நடக்கும்'.. திமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் சென்னையில் கைது!

ABOUT THE AUTHOR

...view details