தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போக்சோ வழக்கில் கைதானவருக்கு அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி! - Heart surgery for POCSO convict - HEART SURGERY FOR POCSO CONVICT

Cardiac treatment in Stanley Hospital: போக்சோ வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் (Credits: ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 4:13 PM IST

சென்னை:போக்சோ வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய இன்று (மே.28) உத்தரவிட்டுள்ளது.

போக்சோ வழக்கில் தண்டிக்கப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்தவருக்கு, தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்ய மூன்று மாத கால விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி, அவரது மகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது மனுதாரரின் தந்தை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீதான பாலியல் வழக்கு: கருக்கலைப்புக்கான ஆதாரம்.. பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேச்சு - Priest Karthik Munusamy Case

இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை பெயர் பெற்ற மருத்துவமனை என்பதால், மனுதாரர் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்று கூறி, ஸ்டான்லி மருத்துவமனையில் மனுதாரரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், அறுவை சிகிச்சைக்குப் பின் மருத்துவமனைக்கு பராமரிப்பிற்காகச் செல்லும் மனுதாரருக்கோ, தாய்க்கோ?எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பாலியல் புகாரில் சென்னை காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது? - PRIEST KARTHIK MUNUSAMY CASE

ABOUT THE AUTHOR

...view details