சென்னை: நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திருநெல்வேலி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இதனிடையே, ஏப்ரல் 6ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
அதில், நயினார் நாகேந்திரனின் கார் ஓட்டுநர் சதீஷ் மற்றும் உதவியாளர்களிடம் இருந்து ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதனை அடுத்து, இம்மாதம் 22ஆம் தேதி தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், 'நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் வேட்பு மனுவில் தன் மீதான குற்ற வழக்கு தொடர்பான தகவலை மறைத்துள்ளார்.