சென்னை: சிவகங்கை தொகுதியின் தற்போதைய எம்பியாக உள்ள கார்த்தி சிதம்பரத்தின் பாஸ்போர்ட், 2014 முதல் 2024 மார்ச் 5 வரை 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதால், 1 ஆண்டுகளுக்கு மட்டும் தான் பாஸ்போர்டை புதுப்பிக்க முடியும் என மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அறிவித்தார்.
இதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு, நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக மனுதாரர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. போலியாக தொடரப்பட்ட வழக்கில், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன் விசாரணை நீதிமன்றத்தின் நிபந்தனை அனுமதியுடன் சென்றுள்ளார். பாஸ்போர்ட் மறுப்பதற்கு ஆதாரம் இல்லாத நிலையில் மறுக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது” என்றார்.