தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! - HM Post in Govt Schools - HM POST IN GOVT SCHOOLS

Madras High Court: அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவருக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2024, 10:40 PM IST

சென்னை:திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி சரகம், தேவர்கண்ட நல்லூரில் உள்ள ஸ்ரீசரஸ்வதி அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியை 1992ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அரசு நடத்தி வருகிறது. கடந்த 1993ஆம் ஆண்டு இந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியராக நக்கீரனின் நியமனத்துக்கு அரசு ஒப்புதல் அளித்தது.

1997ஆம் ஆண்டு முதல் ஆசிரியராக பணியாற்றி வந்த இவருக்கு, துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், பதவி உயர்வுக்காக 2014ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பட்டியலில் நக்கீரனின் பெயர் இடம் பெறவில்லை. அவரை விட இளையவர்களுக்கு 2007ஆம் ஆண்டு முதல் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே, தனக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரி நக்கீரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, “பள்ளியை அரசு ஏற்றுக் கொண்டதுடன், மனுதாரரின் பணியை வரன்முறை செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் அரசு ஊழியர் என்பதால் பதவி உயர்வு பெற அவருக்கு உரிமை உள்ளது.

எனவே, அனைத்து பணப் பலன்களுடன் பதவி உயர்வு வழங்க வேண்டும். கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் முதல் அவருக்கு உரிய சம்பள பாக்கியை வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை 12 வாரங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும்” என அரசுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:'ஜெண்டர் ரிவீல்' செய்து வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு.. சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்பான்! - Irfan Gender Reveal Issue

ABOUT THE AUTHOR

...view details