சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளை முறைப்படுத்துவது தொடர்பாக 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முறைப்படுத்தல் சட்டம் இயற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ், கடந்த 2023 ஜனவரி மாதம் விதிகள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.
அதில், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் துவங்க அரசின் அனுமதி பெற வேண்டும், சிறுபான்மை அந்தஸ்து கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள், அரசியல் சாசனம் வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 300 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், "தமிழ்நாடு அரசின் சட்டத்தில் இருந்து சிறுபான்மை பள்ளிகளுக்கு விலக்களிப்பது குறித்து முடிவெடுக்க, அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.