சென்னை:சென்னையில் உள்ளபெசன்ட் நகரைச் சேர்ந்தவர் அஸ்வின் வர்மா. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "பெசன்ட் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பான 'ரமணியம் ஸ்வர்ணமுகி' என்ற குடியிருப்பில், விதிகளை மீறி போதுமான தரைதள வசதி இல்லாமல், கட்டுமான நிறுவனம் கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் கட்டுமான நிறுவனத்துக்கு ஆதாரவாக செயல்பட்டு உளனர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, மாலா அமர்வில் இன்று (மார்ச் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டுமான நிறுவனம் சார்பில் எந்த விதி மீறல்களும் நடைபெறவில்லை எனவும், பெருநகர வளர்ச்சிக் குழும விதிகளின் படி கட்டுமானங்கள் முடிந்து, உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.