சென்னை: காவல்துறை அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில், சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஃபெலிக்ஸ் ஜெரால்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், ”நீண்ட நாட்கள் சிறையில் அடைத்து வைத்திருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, ஒரே சம்பவம் தொடர்பாக பல வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைக்கமாட்டேன் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி மனு தொடர்பாக காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஜூன்.24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க:கல்வி நிறுவனங்களின் பெயர்களில் சாதி இடம் பெற வேண்டாம்: தமிழ்நாடு அரசுக்கு நீதியரசர் சந்துரு குழு பரிந்துரை - justice chandru committee recommend