தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அரசுப் பள்ளிகளில் உள்ள சாதிப் பெயரை அகற்றுங்கள்' - சென்னை உயர் நீதிமன்றம் கருத்து! - caste name in government schools - CASTE NAME IN GOVERNMENT SCHOOLS

Madras High Court: அரசுப் பள்ளிகளில் உள்ள சாதிப் பெயரை அகற்றுங்கள் என கல்வராயன் மலை வாழ் மக்கள் மேம்பாடு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 3:12 PM IST

சென்னை:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ் மணி நேர்காணல் ஒன்று அளித்திருந்தார். இதனடிப்படையில், கல்வராயன் மலை பகுதி மக்கள் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 26) இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அளித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதனை படித்துப் பார்த்த நீதிபதிகள், ''இதில் 150 அரசுப் பள்ளிகள் கல்வராயன் மலைப்பகுதியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், அடிப்படை வசதிகள் எந்த அளவிற்கு உள்ளன என்று கூறப்படவில்லை. அது மட்டுமல்லாமல், பொதுவாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது'' என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், ''மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் பள்ளிகளில் இன்னும் சாதிப் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றை அகற்ற அரசு முன்வர வேண்டும் என்றும், தெரு பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கியது போல அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சாதிய பெயர்களையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுங்கள்'' என கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்த வழக்கில் மீண்டும் நேரில் சென்று ஆய்வு செய்யுமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கல்வராயன் மலைப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இந்த குழுவுடன் உயர் நீதிமன்றத்திற்கு உதவி செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ்மணியை உடன் அழைத்துச் செல்ல வேண்டும்' என்றும் உத்தரவிட்டனர்.

அப்போது, வழக்கறிஞர் ஏற்காடு மோகன்தாஸ் ஆஜராகி, தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும், பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக மாநில அரசு 9 கோடி 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும், ஆனால், அந்தத் தொகை முழுமையாக செலவிடப்படவில்லை என்று கூறி அது தொடர்பான அரசு ஆவணத்தை நீதிபதியிடம் தாக்கல் செய்தார் .

அதற்கு நீதிபதிகள் உங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அரசு குழுவிற்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்தாமல் நீங்கள் தனியாக சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யலாமென அனுமதி வழங்கினர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மது விற்பனை சட்ட விரோதமானது: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

ABOUT THE AUTHOR

...view details