மதுரை: மேலூரைச் சேர்ந்த ராஜு என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "மதுரை, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சமுதாயம் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தது.
இதில் 29 துணை சமுதாயங்கள் உள்ளன. மொத்தமாக, முத்தரையர் சமுதாயத்தில் 1.60 கோடி மக்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். பெரும்பிடுகு முத்தரையர் மன்னன் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவரது நினைவைப் போற்றும் விதமாக, மதுரையில் முத்தரையர் சிலையை அமைப்பதற்காக பொய்கரைப்பட்டி கிராமத்தில் இடம் வாங்கி, திட்ட வரைபட அனுமதியும் பெறப்பட்டது.
பின்னர் முத்தரையர் சிலையை வைப்பதற்காக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரிய நிலையில், மனு நிராகரிக்கப்பட்டது. இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, மதுரை பொய்கரைப்பட்டி கிராமத்தில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை வைக்கவும், மணிமண்டபம் அமைக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.