தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளிமலை-சின்ன திருப்பதி இடையேயான சாலை எப்போது அமைக்கப்படும்? - உயர் நீதிமன்றம் கேள்வி! - KALVARAYAN HILL DEVELOPMENT CASE

கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள வெள்ளிமலை - சின்ன திருப்பதி இடையேயான சாலை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court
சென்னை உயர்நீதிமன்றம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2024, 8:37 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 69க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக, வாழ்வியல் மேம்பாடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், கல்வராயன் மலைப்பகுதியில் 10 கிலோ மீட்டருக்கு சாலை சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், மண் சாலைகளை சீரமைக்க கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:“மலைப்படி, குளிர்காலப்படி வழங்க உத்தரவு.. 30 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியதற்கு அரசு ஊழியர்கள் நன்றி!

இதனை அடுத்து, "கல்வராயன் மலைப்பகுதியின் முக்கிய சாலையான வெள்ளிமலை - சின்ன திருப்பதி இடையேயான சாலை எப்போது அமைக்கப்படும்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், "மதிப்பீடு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், கூடிய விரைவில் பணிகள் முடிக்கப்படும்" என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், வெள்ளிமலை - சின்ன திருப்பதி இடையேயான சாலை எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details