தமிழ்நாடு

tamil nadu

ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனையுடன் ஜாமீன்.. யூடியூப் சேனலையும் மூட உத்தரவு! - Felix Gerald Case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 31, 2024, 3:40 PM IST

Felix Gerald Case: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஃபெலிக்ஸ் ஜெரால்டு, சென்னை உயர்நீதிமன்றம்
ஃபெலிக்ஸ் ஜெரால்டு, சென்னை உயர்நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: காவல்துறை அதிகாரிகளையும், பெண் காவலர்களையும் அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது பதியப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் (ரெட் பிக்ஸ்) தலைமை நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஏற்கனவே ஃபெலிக்ஸ் ஜெரால்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி T.V.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேகநாதன், சர்ச்சைக்குரிய வகையில் இனி பேச மாட்டேன் என இதே போன்ற வழக்கில் ஏற்கனவே ஃபெலிக்ஸ் ஜெரால்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகவும், ஆனால் அதனை மீறி தொடர்ந்து இப்படி பேசி வருவதாக கூறினார்.

ஃபெலிக்ஸ் ஜெரால்டு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், தனது பேச்சுக்கான விளைவை தற்போது தான் உணர்ந்துள்ளதாகவும், இனி ஒரு போதும் இவ்வாறு பேச மாட்டேன் என உறுதி அளித்ததாக தெரிவித்துள்ளார் என வழக்கறிஞர் கூறினார்.

இதனையடுத்து, ஃபெலிக்ஸ்-க்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, அவரது யூடியூப் சேனலை மூட வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் இனி நேர்காணல் அளிக்க மாட்டேன் என விசாரணை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் வழக்கு; காவல்துறை கடும் வாதம்.. கோர்ட்டில் நடந்தது என்ன? - felix gerald bail

ABOUT THE AUTHOR

...view details