சென்னை:கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதில் சுமார் 68 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கியது. ஆனால், கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கூறப்படும் கல்வராயன் மலைப் பகுதி மக்கள் சமூக, பொருளாதார மேம்பாடு இல்லாததால் இந்த தொழிலில் கட்டாயத்தால் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக, கல்வி மேம்பாடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதி ராமன் அமர்வு முன் நேற்று (ஜனவரி 8) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிகள் நிலை குறித்த கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க:விக்கிரவாண்டி பள்ளி மாணவி மரண வழக்கு; ஜாமீன் கோரிய மூவரின் மனுக்களும் தள்ளுபடி..!