தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை சிஎம்டிஏ பிளான்: மிகப்பெரிய நிலப்பரப்பை நீர்பிடிப்பு பகுதி என அறிவித்தது சட்டவிரோதம் - சென்னை உயர்நீதிமன்றம் - CMDA Chennai - CMDA CHENNAI

Chennai City Development Plan: சென்னை பெருநகர இரண்டாவது முழுமை திட்டத்தின் (மாஸ்டர் பிளான்) அடிப்படையில், புறநகர் பகுதியில் உள்ள 27 கிராமங்களில் உள்ள 13 ஆயிரத்து 720 ஹெக்டேர் நிலப்பரப்பை 'செங்குன்றம் ஏரி நீர்பிடிப்பு பகுதி' என அறிவித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பிறப்பித்த உத்தரவை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court displeasure about CMDA CHENNAI Master Plan
Madras High Court displeasure about CMDA CHENNAI Master Plan (Photo Credits: Madras High Court official Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 7:00 AM IST

சென்னை:சென்னை பெருநகர இரண்டாவது முழுமை திட்டத்தின் (மாஸ்டர் பிளான்) அடிப்படையில், புறநகர் பகுதியில் 27 கிராமங்களில் பரந்து விரிந்திருந்த 13 ஆயிரத்து 720 ஹெக்டேர் பரப்பு நிலத்தை 'செங்குன்றம் ஏரி நீர்பிடிப்பு பகுதி' எனக் கூறி, சோழவரம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட அலமாதி கிராமத்தில் இயங்கி வந்த இரு தனியார் நிறுவனங்களை மூடி சீல் வைத்தும், கட்டுமானங்களை இடிக்கவும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 2017ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து குளோபல் வேஸ்ட் ரீசைக்கிளிங் நிறுவனம், பி.டி.எண்டர்பிரைசஸ் நிறுவனம் என்ற இரு நிறுவனங்களும் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, மிகப்பெரிய நிலப்பரப்பை நீர்பிடிப்பு பகுதி என அறிவித்தது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என உத்தரவிட்டது.

தமிழக அரசுக்கோ, உள்ளாட்சி அமைப்புகளுக்கோ இவ்வளவு பெரிய நிலப்பரப்பான 13 ஆயிரத்து 720 ஹெக்டேர் பரப்பை நீர்பிடிப்பு பகுதி எனவும், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளக் கூடாத பகுதி எனவும் அறிவிக்க உரிமை இல்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள், சென்னை பெருநகர இரண்டாவது முழுமை திட்டத்தை, இந்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு நகரமைப்பு சட்ட விதிகளை பின்பற்றி மாற்றியமைக்கவும் உத்தரவிட்டனர்.

மேலும், அறிவிப்புக்கு பின் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளாமல், இழப்பீடு வழங்காமல், சில நிறுவனங்களுக்கு சாதகமாகவும், மனுதாரர் நிறுவனங்களுக்கு பாரபட்சமாகவும் செயல்பட்டுள்ளதாகக் கூறி, மனுதாரர் நிறுவனங்களுக்கு சீல் வைத்தும், கட்டிடங்களை இடிக்கவும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:சேலம் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல்; சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையில் கடைகளுக்கு தீ வைப்பு; போலீசார் தடியடி! - Salem Festival Clash

ABOUT THE AUTHOR

...view details