சென்னை:புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் நல நிதிs சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்தக் கோரி, பரிதா பேகம் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இளம் வழக்கறிஞர்களின் பணியை பயன்படுத்தும் மூத்த வழக்கறிஞர்கள், குறைந்தபட்சம் 20,000 ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இவ்வழக்கு மனுதாரர் தரப்பில் உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் கோரி, 441 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதி 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பத்தினரிடம் இருந்து பெறப்பட்ட 441 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகவும், அவற்றில் பல விண்ணப்பங்கள் பழையது. அதிகரிக்கப்பட்ட நல நிதிக்கு, கூடுதல் பணத்தை விடுவிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. ஆனால், இன்னும் வழங்கப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கான சலுகைகளை அவ்வப்போது அரசு வழங்கும் போது, வழக்கறிஞர்களுக்கான நல நிதியையும் தாமதமின்றி வழங்க வேண்டும்.