சென்னை:நாடு முழுவதும் உள்ள மருத்துவ ஆய்வகங்களை முறைப்படுத்தும் வகையில், மத்திய அரசு கடந்த 2010ஆம் ஆண்டு மருத்துவ ஆய்வகங்கள் பதிவு மற்றும் முறைப்படுத்தல் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டப்படி, அனைத்து மாநிலங்களிலும் துணை மருத்துவ கவுன்சில் அமைக்கப்பட வேண்டும் என்றும்
தமிழகத்தில் உரிய தகுதியைப் பெறாத நபர்கள் மூலம் ஆய்வகங்கள் நடத்தி, மக்களின் உயிருடன் விளையாடுவதால், துணை மருத்துவ கவுன்சில் அமைக்க உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு மருத்துவ ஆய்வகங்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று (ஜன.30) விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்படி உரிய விதிகளை வகுத்து, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி, தமிழ்நாடு துணை மருத்துவ கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மாதங்களில் இப்பதவிகளுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.