தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக கொடி, இரட்டை இலை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை - சென்னை உயர் நீதிமன்றம்!

OPS Case Verdict: அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 2:34 PM IST

Updated : Mar 18, 2024, 3:00 PM IST

சென்னை:அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த 2023ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கில் பதிலளிக்க ஒ.பி.எஸ். தாமதப்படுத்துவதை சுட்டிக்காட்டி, அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இடைக்கால தடைக்காலம் முடிந்த நிலையில் தடையை நீட்டிக்க வேண்டாம் எனவும், வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஒபிஎஸ் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

கட்சியின் கொடியை பயன்படுத்த அனுமதித்தால் அது, தவறான முன்னுதாரணாகி விடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை மார்ச் 12ம் தேதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (மார்ச் 18) தீர்ப்பளித்த நீதிபதி சதீஷ்குமார், அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: தமிழிசை செளந்தரராஜன் ஆளுநர் பதவியை துறந்தது ஏன்? - தேர்தலில் வெல்வாரா?

Last Updated : Mar 18, 2024, 3:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details