சென்னை: விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம்,'' உங்களுடைய பணம், உங்களுடைய தாலியை அறுத்து, உங்கள் வீட்டில் இருக்கிற சாமான்களை அடமானம் வைத்து, டாஸ்மாக்கிலே குடித்து அந்த வருமானத்தில் மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் இந்த ஸ்டாலினுக்கு கிடைக்கிறது'' என குறிப்பிட்டிருந்தார்.
சிவி சண்முகத்தின் இந்த பேச்சு, முதலமைச்சரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி, சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பி. வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் ஜனநாயக கடமை தான். ஆனால், அதில் கண்ணியம் தேவை என்று சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க:"திமுக - அதிமுக இரு கட்சிகளுக்கும் நல்லது செய்யும் எண்ணம் இல்லை" - நீதிபதி வேல்முருகன் வேதனை!