தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி தமிழ் மொழித்தாள் தேர்வு விவகாரம்; தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு! - TNPSC Tamil paper issue - TNPSC TAMIL PAPER ISSUE

Tamil Compulsory exam: டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

TNPSC
டிஎன்பிஎஸ்சி மற்றும் உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 9:50 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில், தமிழ் மொழித் தாளில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து, குரூப் 4 தேர்வு விண்ணப்பதாரர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் அரசாணை காரணமாக ஆங்கில வழியில் படித்தவர்கள் பாதிக்கப்படுவர் எனவும், ஏற்கனவே தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கும் போது, தற்போதைய அரசாணை மூலம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு நூறு சதவீத இடஒதுக்கீடு வழங்குவதைப் போலாகி விடும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், பெண்கள் இடஒதுக்கீடு பின்பற்றுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இதனையடுத்து, தமிழக அரசுத் தரப்பில், இது அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதிமன்றம் தலையிட முடியாது என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:பாலின சார்பற்ற கழிப்பிடங்கள்; அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details