சென்னை: வெளிநாடுகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறை கடந்த மார்ச் மாதம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை கைது செய்தது. இந்த நிலையில், போதைப் பொருட்கள் விற்பனை செய்த பணத்தில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்தது.
ஜாபர் சாதிக் இந்த வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, டெல்லி திகார் சிறையில் இருந்த ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாபர் சாதிக்கை கைது செய்வதற்கான உத்தரவு மற்றும் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரியும் அமலாக்கத்துறை தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ஜாபர் சாதிக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம், ''சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் 24 மணி நேரத்தில் காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. மேலும், போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக் ஏற்கனவே ஜாமீன் பெற்று விட்டார்.