தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு வழக்கு; "தற்போது ஈபிஎஸ் முதல்வராக இல்லையே" - நீதிபதி கருத்து! - KODANAD CASE

கோடநாடு வழக்கு தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டுமென குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்ற கோப்புப்படம்
எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்ற கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2024, 11:01 PM IST

சென்னை :மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்துவிட்டு ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இதையும் படிங்க :'போராட்டம் நடத்துவோம்'.. அரசு மருத்துவமனை காலி பணியிடங்களை நிரப்புங்க - சிபிஐ முத்தரசன்..!

அதில், ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கோடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும். புலன் விசாரணைக் குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை. குற்றம் சுமத்தப்பட்ட முக்கிய நபர்களை விட்டுவிட்டதாக மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவுக்கு தொடர்பு இருப்பது அனைவருக்கும் தெரியும் என வாதிட்டார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்ததால் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தி, சம்பந்தமில்லாமல் முதலமைச்சருக்கு சம்மன் அனுப்ப கேட்க முடியாது என நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் வழக்கு தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். இதையடுத்து, தற்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இல்லையே என தெரிவித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details