தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“சோழர் காலத்தில் இருந்தே இருந்தாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்” - உயர் நீதிமன்றம் கருத்து!

கோலடி ஏரி விவகார வழக்கில், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர் காலத்தில் இருந்தே இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2024, 7:43 AM IST

சென்னை: சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை தாக்கல் செய்தார். மேலும், அந்தப் பகுதியில் 20 வருடங்களுக்கு மேல் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.

இதையும் படிங்க :வடலூர் வள்ளலார் மையம்; நிலம் வகைமாற்றம் செய்ததில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கெடு!

அப்போது குறுகிட்ட நீதிபதிகள், 20 ஆண்டுகள் இல்லை, சோழர் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டுமென நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், 162 ஏக்கரில் இருந்த ஏரி தற்போது 112 ஆக சுருங்கி விட்டதாகவும் கூறினர்.

அப்பகுதியில் வசிக்கும் நபர்கள் சார்பாக வழக்கறிஞர் ம.கவுதமன் ஆஜராகி, உரிய பட்டாவோடு மக்கள் வீடுகளை கட்டி வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். அப்போது நீதிபதிகள், கடும் மழைக்காலத்தில் அந்தப் பகுதி மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டே தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துள்ளதாகக் கூறினர். மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தை நியமித்து உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details