தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்.. பவானிசாகர் அணையில் பதுங்கியிருக்கும் மர்மம்! - BHAVANISAGAR DAM temple - BHAVANISAGAR DAM TEMPLE

Bhavanisagar Dam: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், நீரில் மூழ்கியிருந்த மாதவராயப் பெருமாள் கோயில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிகிறது.

Bhavanisagar Dam
Bhavanisagar Dam

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 9:24 PM IST

Updated : Apr 21, 2024, 9:50 AM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அணையின் நீர்மட்டம் 47 அடியாகக் குறைந்து விட்டதால், அணையின் நீர்தேக்கப்பகுதியில் உள்ள பழங்காலக் கோயில்கள் வெளியே தெரிகின்றன.

அந்த வகையில், டணாய்க்கன் கோட்டை பகுதியில் நீரில் மூழ்கியிருந்த மாதவராயப் பெருமாள் கோயில் முழுவதுமாக காட்சியளிக்கிறது. கோயில் உள்பிரகாரத்தில் அமைக்கப்பட்ட 32 தூண்களும் காட்சியளிக்கின்றன. இன்னும் 12 முதல் 14 அடி வரை நீர்மட்டம் குறைந்தால், சோமேஸ்வரர் மங்களாம்பிகை கோயில், பீரங்கித்திட்டு உள்ளிட்டவை முழுவதுமாக காட்சியளிக்கும்.

கடந்த 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு, தொடர்ந்து 6 ஆண்டுகளாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறையாமல் இருந்ததால், வெளியே தெரியாத டணாய்க்கன் கோட்டை மாதவராயப் பெருமாள் கோயில், நீர்மட்டம் குறைந்ததால் தற்போது மீண்டும் வெளியே தெரிகிறது.

இவை சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்கள் என கல்வெட்டுக்கள் மற்றும் வரலாறுகளில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த கல்வெட்டுகளைத் தொல்லியல் வல்லுநர்கள் ஆராய்ந்தால், மேலும் பல வரலாறுகள் தெரியவரும் என சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும், இக்கோயில்களைப் பொதுமக்கள் சென்று பார்க்க வசதி இல்லை. எனவே, அணையின் நீர்மட்டம் குறைந்த காலங்களில் இக்கோயில்களைக் காணப் பொதுப்பணித்துறை படகு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:புதுக்கோட்டையில் கடந்த 5 ஆண்டுகளாக மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சென்னையில் சிக்கியது எப்படி? - Chennai Airport

Last Updated : Apr 21, 2024, 9:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details