சென்னை: தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.
இதன் ஒரு பகுதியாகத் தேர்தல் நடைமுறையில் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்பினை அதிகப்படுத்தும் விதமாக வினாடி வினா நிகழ்ச்சியானது 14.04.2024 அன்று பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டடத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகையில் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு அணியிலும் இரண்டு முதல் மூன்று நபர்கள் (குறைந்தது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருநபர்கள்) பங்கேற்கலாம். முதல்நிலைப் போட்டியானது இணைய வழியில் நடைபெறவுள்ளதால் பங்கேற்பாளர்கள் அனைவரும் கைப்பேசி மூலமே பங்கேற்க இயலும்.
இப்போட்டியானது காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்கும் ஆர்வமுடையோர் தங்களது பெயர், முகவரி மற்றும் கைப்பேசி எண்ணை goalquiz@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.
இப்போட்டியில் பங்கேற்க இணையவழி மூலம் பதிவு செய்வது மிகவும் அவசியம். நேரடியாகப் பதிவு செய்வதற்கு அனுமதி இல்லை. தேர்தல் / தேர்தல் நடைமுறை மற்றும் பொது அறிவு (முறையே 50%) சார்ந்து வினாடி வினா போட்டிகள் நடைபெறும்.
போட்டி குறித்த விவரம் பின் வருமாறு:-
போட்டி நடைபெறும் இடம்:அம்மா மாளிகை, ரிப்பன் கட்டடம், சென்னை மாநகராட்சி, சென்னை.